உன்னைக் காக்கும் தேவன் தூங்குவதுமில்லை, அயர்வதுமில்லை.இந்த வலைப்பூவை வாசித்து கொண்டிருப்பவரை கத்தர் இயேசு நிறைவாக ஆசிர்வதிப்பாராக.

Monday, March 16, 2015

நாங்க நல்லா இருக்கணும் ஆண்டவரே

நாங்க நல்லா இருக்கணும் ஆண்டவரே
எங்க குடும்பம் தழைக்கணும் ஆண்டவரே
சரணங்கள்

கடன் தொல்லை தீரணும் ஆண்டவரே – எங்க
கஷ்ட நஷ்டம் மாறணும் ஆண்டவரே
வியாதிப் பிணி நீங்கணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

வீண் பயங்கள் மாறணும் ஆண்டவரே – எங்க
அறியாமை நீங்கணும் ஆண்டவரே
சண்டை பகை தீரணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

வேலை தொழில் கிடைக்கணும் ஆண்டவரே – நல்ல
வருமானம் கிடைக்கணும் ஆண்டவரே
செய்யும் தொழில் வளரணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

 தடைகளெல்லாம் மாறணும் ஆண்டவரே – வீட்டில்
நல்ல காரியம் நடக்கணும் ஆண்டவரே
பேயின் தொல்லை நீங்கணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

 குடிவெறிகள் நீங்கணும் ஆண்டவரே – எங்க
பாவ மாசு அகலணும் ஆண்டவரே
பற்றெல்லாம் மாறணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

 அன்பு கொண்டு வாழணும் ஆண்டவரே – நாங்க
ஒன்று கூடி ஜெபிக்கணும் ஆண்டவரே
வேத வசனம் படிக்கணும் ஆண்டவரே – நீங்க
நினைக்கிறது நடக்கணும் ஆண்டவரே

நன்றி  CPM - பாடல்கள்
http://www.catholicpentecostmission.in/CPM_Lyrics%201.html
Share:

0 comments:

Post a Comment